Skip to content
Home » கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Senthil

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால்  இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு செல்லும் முன்பு  தனபால்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கன்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன்.  இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.  யார் சொல்லி,   இந்த சம்பவங்களை செய்தார் என கனகராஜ் என்னிடம் கூறி இருக்கிறார்.
இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். விசாரணை செய்து வருகின்றனர். இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர். சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். கீழ் மட்ட அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும் பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கின்றேன்.
சென்னையில்  ஒரு வீட்டில் ஐந்து நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர்.  சம்பந்தப்பட்ட முக்கிய நபரை விசாரித்தால் எல்லா உண்மைகளும் தெரியவரும். சென்னையில்  தான் சதிதிட்டம் போடப்பட்டது.  முக்கிய புள்ளியை அழைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!