Skip to content
Home » கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இரா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு. எதிர்வரும் 17-3-24 மற்றும் 18-3-24 ஆகிய தேதிகளில்  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்  திருக்கோயில் பூச்சொரிதல் நடைபெறும் திருவிழாவினை முன்னி்ட்டு பெருந்திரளாக பக்தர்கள் பொதுமக்கள் வருவார்கள், என்பதால் பொதுமக்களின்  நலனிற்காக 51 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளன இந்த பேருந்துகள் பொன்னமராவதி, திருப்பத்தூர், திருமயம், நமணசமுத்திரம்,  புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்  திருக்கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்து வசதிகளை  பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!