Skip to content
Home » நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி கோவை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி கோவை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

  • by Senthil

கோவை மதுக்கரை அருகேயுள்ள திருமலையாம்பாளையத்தில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காந்திபுரத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனாவுக்கு பின் 3சி பேருந்து நிறுத்தப்பட்டது. சில பேருந்துகளின் நேரமும் மாற்றப்பட்டு சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மணவ மாணவியர், விவசாய கூலிகள், நகரத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் போக்குவரத்துக் கழக முதன்மை மேலாளரிடம் புகாரளித்துள்ளனர்.

பல முறை புகாரளித்தும் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காததால், திமுக கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அப்பகுதிபொதுமக்கள் காலை 7.30 மணியலிருந்து அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கா க சாவடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக கவுன்சிலருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம் குறித்து திமுக கவுனிச்லர் ரமேஷ் பேசும்போது நிறுத்திய அரசு பேருந்தை திரும்ப இயக்கச்சொன்னால், வந்துகொண்டிருந்த பேருந்தையும் அதிகாரிகள் நிறுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போக்குவரத்து கழக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இங்கு காந்திபுரத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வந்தன. இந்நிலையில் கலந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தும், முறையாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், சரிவர பேருந்துகளை இயக்காமலும் போக்குவரத்து நிர்வாகம் இருந்து வந்து உள்ளனர். இதனால்

அப்பகுதி பள்ளி மாணவ – மாணவிகள், அலுவலகங்கள் செல்லும் பணியாளர்கள் மற்றும் கூலி பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து அப்பகுதி தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து கழகத்திற்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருந்து வந்துள்ளதாக கூறி இன்று காலை 7:30 மணிக்கு அங்கு வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து தி.மு.க உறுப்பினர் உட்பட பகுதி பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!