Skip to content
Home » கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

பெண்கள் மத்தியில்,தற்போது பெரும் அச்சுறுத்தலாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த நோய்க்கான . ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் கோவையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி சார்பாக,பிரின்சஸ் புரொடக்டர் (PRINCESS PROTECTOR) எனும் சேவை திட்டத்தின் கீழ்,
எச்..பி.வி. (HPV) தடுப்பூசி திட்ட முகாம் துவங்கப்பட்டது..சாய்பாபாகாலனி விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இதற்கான துவக்க விழா ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி செயலாளர் நீதிகா பிரபு ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர்

எதிர்கால கவர்னர் சுந்தரவடிவேலு கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக ரோட்டரி 3201 மாவட்ட இயக்குனர் கோகுல் ராஜ்,ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டியின் தலைவர் கிருஷ்ணா சாமந்த், புராஜக்ட் தலைவர் சந்தீப் ஷா, விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..ஆறு மாதம் நடைபெற உள்ள இந்த முகாமிற்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளதாகவும்,முதல் கட்ட பதிவுகளுக்கு சலுகை வழங்க உள்ளதாகவம், ஒன்பது முதல் 14 வயதுடையவர்களுக்கு இரண்டு டோஸ் வழங்கப்படும் மேலும் 15 லிருந்து 45 வயதுள்ளவர்களுக்கு மூன்று டோஸ் போட உள்ளதாக தெரிவித்தனர். இந்த தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!