Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் சரவணன் 45. இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வாக்கிங் சென்று விட்டு மீண்டும் காலை வீடு திரும்புவது வழக்கம்.

இன்று அதிகாலை வாக்கிங் செல்வதற்காக சிலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். குளித்தலை ரயில் நிலைய பிளாட்பார்ம் அருகே கீழே இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சென்னை மங்களூர் விரைவு ரயிலில்

எதிர்பாராத விதமாக அடிபட்டுள்ளார். இதில் சுமார் 30 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!