Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலை அருகே பெரிய தம்பி நகரை சேர்ந்தவர் கலாவதி(67). இவர் தினமும் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தெருக்களுக்கு நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்ற போது 2 மர்மநபர்கள் கலாவதி கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள 3 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறிக்க முடியாமல் சென்றுவிட்டனர். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!