Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி( 42 ) . இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையில் அவரது கணவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 4 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கொள்ளிடம் போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!