உணவின்றி தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்….

150

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் சிக்கி தவிக்கும் 100-க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தவு நாடு முழுவதும் அமலுக்கு வந்து நிலையில், முக்கிய வணிகத் தளங்கள் தொடங்கி பல சாதாரண கடைகள் வரை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளதால் உணவகங்களை மட்டுமே நம்பியிருக்கும் லாரி ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். தங்களுக்கு உணவு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY