Skip to content
Home » மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல் , சளி, இருமல் போன்ற நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில் தற்போது சென்னையில் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . அதனை தடுக்கும் நடவடிக்கைகள் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னையில் பரவும் கண்வலி தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சேனை எழும்பூர் மருத்துவமனையில் 240 பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு ‘மெட்ராஸ்-ஐ’ நோய் ஏற்பட்டால் குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் நிலை உள்ளது. கண்வலி ஏற்பட்டால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில்  10 நாட்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்ய உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதிலும் இந்த ஆண்டு மட்டும் 1,46,957 பேருக்கு கண் அறுவை சிகிச்ச செய்யப்பட்டு உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 3,702 பேர் தங்கள் கருவிழியை தனமாக தந்துள்ளனர் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!