கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வயல்வெளியில் மயில்களை வேட்டையாடியதாகக் கூறப்படும் நபரை கிராம மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நபர் ஒருவர் மயில்களை வேட்டையாடியதாகத் தெரிகிறது.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
