கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு இரவு நேரத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் முறையாகவும் நேர்மையாகவும் விசாரிக்கப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைசெல்வன் ஆவேச பேச்சு…….!
அவதூறு என்பது வேறு விமர்சனம் என்பது வேறு எனவும் தோழமையின் இலக்கணமே விமர்சனம் தான் ஆக்கபூர்வமான விமர்சனங்களை யார் வைக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தோழமை சக்தியாக இருக்க முடியும் வைகோவிற்கு பதிலடி கொடுத்த விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்….
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சங்கராபுறத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் இள.சிலம்பன் தலைமையில் நடைபெற்றதுஇந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் கலந்துகொண்டு புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி உத்வேகத்துடன் செயல்படும் வேண்டுமென வாழ்த்து பேசி சிறப்புரையாற்றினார்…
பின்னர் செய்தியாளர்ரை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு இரவு நேரத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் முறையாகவும் நேர்மையாகவும் விசாரிக்கப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இணையத்தின் மூலமாக முன்வைக்க வைக்கப்படுகிற பல குற்றச்சாட்டுகள் போலியான குற்றச்சாட்டுகளும் ஒருவருடைய பெயரை இன்னொருவர் பயன்படுத்துவது போக்குகள் அதிகரித்து வரும் நிலையில் போலீஸ் சைபர் கிரைம் உள்ளிட்ட அமைப்புகள் இது போன்ற பல்வேறு குற்ற நிகழ்வுகளை வலுவாக தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…
அமைச்சரவையில் இருந்து கொண்டே
தவெக ஆட்சியை விமர்சிப்பதாக விசிக மற்றும் காங்கிரசை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் வைகோ….?
அவதூறு என்பது வேறு விமர்சனம் என்பது வேறு எனவும் தோழமையின் இலக்கணமே விமர்சனம் தான் கூட்டணி கட்சியில் யார் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தோழமை சக்தியாக இருக்க முடியும் என்பதை காலம் மெல்ல மெல்ல அவர்களுக்கு உணர்த்தும்
எனவும் வைகோவிற்கு பதிலடி
எப்போதெல்லாம் தங்களது அரசியல் செல்வாக்கை இழந்து போகிறார்களோ சொந்த மக்களிடத்திலே அம்பலப்பட்டு போகிறார்களோ தங்களை விட வலிமை குறைவாக இருக்கிற சமூகங்கள் மீது பகையை மூட்டி அதை அரசியலாக்கி தங்களை அரசியல் வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சிக்கிற கடந்த கால அனுபவங்கள் இனிமேல் பலிக்காது எனவும் உழைக்கும் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக அனைத்து மக்களையும் திரட்டுவது என்பது தோல்வியடைந்த ஒரு அரசியல் அணுகுமுறை எனவும் பாட்டாளி மக்கள் கட்சி தமது மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் எனவும்
கல்வராயன் மலைப்பகுதியில் பல்லடுக்கு விவசாயத்தை தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டுமெனவும் கல்வராயன் மலைப்பகுதியை ஆகச் சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் அத்தகைய வளர்ச்சி பணிகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தினால் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரு சமூக நல்லிணத்திற்கான மாவட்டமாக அமையும் எனவும்
அண்மையில் தமிழகத்தில் நடந்து வரும் மிகக் கொடூரமான வன்முறைச்சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலை அளிப்பதாகவும்
மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தமிழக அரசையும் கூட்டணியில் இருக்கக்கூடிய விசிக்கா வையும் பொது மேடைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வைத்து வருகிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கவனித்து வருகிறார் என மழுப்பு சென்றார்…
