Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும் மயிலாடுதுறை அருகே வழுவூரில் திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் வளைவில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கியது. நன்னிலம் பேருந்து

ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர்த்தப்பினர். பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் தங்கள் ஊர்களுக்கு சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!