Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே , இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை சார்பில் 8வது ஆண்டாக மிலாது நபி விழா பேரணி நடந்தது. இராஜகிரி ஹனபி பெரியபள்ளி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாலை ஜமா அத் தார்கள் மற்றும் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் மாணவர்கள் இணைந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைப் பெற்றது. இரவு இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் மீலாது விழா நிகழ்ச்சியில் பெரியபள்ளி தலைவர் யூசுப் அலி தலைமை வகித்தார். முன்னதாக உறுப்பினர் முகம்மது அனீஸ் வரவேற்றார். பெரிய பள்ளி இமாம் முகம்மது இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்தார். இமாம்கள் சாகுல் ஹமீது, அப்துல் மாலிக்,பஹமி, பெரியபள்ளி வெல்பேர் மனிதம் கிளினிக் டாக்டர் முகம்மது தாரிக் வாழ்த்தினர்.

சென்னை அபூபக்கர் உஸ்மானி நவீன பிரச்சினைகளும் நபிகளாரின் தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசினார்.
கல்வி மைய தலைமை ஆசிரியை ஜுவேரியா நன்றி கூறினார். பெரிய பள்ளி உறுப்பினர்கள் அப்துல் ரவூப், முகம்மது பாரூக், சபீர் அகமது, ஹபீப் முகம்மது, அப்துல் ஹமீது கல்வி மைய தலைவர் பாரூக்,கீழப்பள்ளி நிர்வாகத்தினர் கலீல்‌ ரகுமான், சேக் அலாவுதீன், நஜீர்,வாப்புரியா பள்ளி அப்துல் காதர், வெல்பேர் தலைவர் முகம்மது காசிம் ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூது பாட்சா, காசுமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க நிறுவனர் முபாரக் ஹீசைன், உறுப்பினர்கள் சிக்கந்தர், மசாரத், மாலிக், அப்துல் ஜப்பார் மற்றும் ஜமாஅத்தினர்கள் உட்பட கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!