Skip to content
Home » கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

  • by Senthil

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஶ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது…அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்களிடம் உள்ளார்கள் என தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் நாம் இரண்டு கோடி தொண்டர்களை நம்மிடையே வைத்திருக்க செயல்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியது எதிரிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என்று, ஆனால் இன்றைக்கு நம்முடைய தலைவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எதிரிகள் அருகில் வரவே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் வருங்காலத்தில் நாம் தான் திமுக தலைவர் தான் திமுக இயக்கம் தான் முன்னிலையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஆட்சியைப் பிடிப்பார். மாவட்ட செயலாளர் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் இளைஞர் அணி மாணவர் அணி என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் புதிய உறுப்பினர்களை சேர்க்க உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நாம் தான் பதவிக்கு வந்து விட்டோமே என்று கால் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு செயல்படக்கூடாது நான் சொன்னது கால் தான் என்ற அமைச்சர் நேரு  நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற கணத்தில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!