Skip to content
Home » காசு கொடுத்து வாக்கு…விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை…அய்யாக்கண்ணு பேட்டி..

காசு கொடுத்து வாக்கு…விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை…அய்யாக்கண்ணு பேட்டி..

  • by Senthil

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 2வது நாளாக பட்டை அடித்துக் கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும்.  விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நேற்று காலை முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு

 

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இனிப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு :-

நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அண்ணாமலையும் விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு எதுவுமே தரவில்லை. தமிழக அரசு இலவச மின்சாரம் கொடுப்பதாக கூறினாலும் கூட விவசாய விலைப் பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுப்பதில்லை. மோடி நெல்லுக்கு 5400 தருகிறேன் என்றார்கள் இதுவரை தரவில்லை கரும்பு கண்ணுக்கு 8,500 தருகிறேன் என்றார்கள். அதுவும் தரவில்லை தேர்தலில் வந்தால் காசு கொடுத்து வாக்கை வாங்கிக் வாங்கிக் கொள்வதால் விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை
என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!