Skip to content
Home » என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..

என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை கனமழை கடுமையாக சீரழித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து, உயிர்ப்பலிகள் நேருமளவுக்கு அங்கே பரிதவிப்பு சூழ்ந்தது. பல கிராமங்கள் தகவல் தொடர்பிலிருந்தே துண்டிக்கப்பட்ட சூழலில், வெள்ள மீட்பு பணிகள் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிகாரிகள் புடைசூழ ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ்
அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ்

அவர்களில் மண்ணின் மைந்தரான இயக்குநர் மாரி செல்வராஜும் இடம்பெற்றிருந்தார். தென்மாவட்டங்களின் ஒவ்வொரு கிராமமும் அவருக்கு அத்துப்படி என்பதாலும், தனது பகுதி என்பதாலும் தன்னார்வலர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார். மாமன்னன் திரைப்படத்துக்காக மாரி செல்வராஜ் – உதயநிதி இணைந்திருந்ததால், இருவரின் வெள்ள மீட்பு மற்று ஆய்வு பணிகளை எதிர்க்கட்சியினர் வெகுவாக சமூக ஊடகங்களில் சாடி வந்தனர்.

‘சினிமா இயக்குநரான மாரி செல்வராஜுக்கு அங்கே என்ன வேலை? முன்னாள் நடிகர் உதயநிதியுடன் படப்பிடிப்புக்காக லொகேஷன் பார்க்க சென்றிருக்கிறாரா?’ என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்களால் கடுமையாக மாரி செல்வராஜ் சீண்டப்பட்டார்.

சமூக ஊடகங்களில் நீண்ட பதிவுகள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருக்கும் மாரி செல்வராஜ், தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு காரசாரமாய் பதிலடி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நறுக்கென இருவரிகளுடன் தனது பதிலை இன்று அவர் பதிவிட்டிருக்கிறார். அதில், ““என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் தன்னைத் தாக்கியவர்களை பொதுவெளியில் தனித்து அடையாளம் காணச் செய்திருக்கிறார். கூடவே மக்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜின் இந்த பதிவின் கீழ் நீண்ட விவாதங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!