Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் கண்டனம்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாவட்ட தலைவர் பழனிசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஆரம்ப கால கட்டம் முதல் இன்று வரை இட ஒதுக்கீடுக்காக குரல் கொடுத்து வரும் மருத்துவர் ராமதாஸை விமர்சித்து பேசிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டனம் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!