Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை தொகுதி…. நாதக வேட்பாளர் கார்த்திகா

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து மும்முரம் காட்டி வருகிறது.இந்நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி முந்திக்கொண்டு போட்டியிட உள்ள வேட்பாளரை  நேற்று  அறிமுகப்படுத்தியது.

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் அப்பு, நாகை நாடாளுமன்ற தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவையை சேர்ந்த பெண் பொறியாளர் கார்த்திகாவை அக்கட்சியினர் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கூறியதாவது:
பொன் விளையும் மருதம் மற்றும் நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வாதாரத்தை காக்க மீத்தேன், சேல்கேஸ் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்தையும், மீன்வளத்தையும் காப்பேன் என்பதை முன்னிறுத்தி  வாக்காளர்களிடம் வாக்கு கேட்பேன். நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தனக்கு, மாற்றத்திற்காக, வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!