குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பல்சானா பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 5 குழந்தைகளுக்கு பாராசிட்டமாலுக்கு பதிலாக நீரிழிவு நோய்க்கான கிளிமெபிரைடு 2 மி.கி. மருந்து தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது. செப்.23ம் தேதி நடைபெற்ற முகாமில் 7 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேருக்கு தவறான மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளும் செப்.24ம் தேதி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி முகாமில் அலட்சியம்.. 5 குழந்தைகள் ஐசியுவில் அனுமதி
