Skip to content
Home » நெல்லூர் அருகே புயல் கரை கடக்கத் தொடங்கியது….. சூறைக்காற்றுடன் மழை

நெல்லூர் அருகே புயல் கரை கடக்கத் தொடங்கியது….. சூறைக்காற்றுடன் மழை

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த  புயல்  நேற்று  முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில்,  சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மாலையில் ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே நகரத் தொடங்கியது.  இன்று காலை 9.30 மணி அளவில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே பாபட்லா என்ற இடத்தின்  அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க இன்று முற்பகல் ஆகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நெல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன்  கனமழையும் கொட்டி  வருவதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டமே இன்று முடங்கி உள்ளது.   ெநல்லூர்  மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!