Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாநகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய்யின் பாணியை பின்பற்றிய கரூர் மாநகராட்சி புதிய ஆணையர்; இருக்கையில் இருந்த வெள்ளைத் துண்டை அகற்றி புதிய ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆணையர் சுதா, புதிய ஆணையர் பிரதிவிராஜுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார். தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் அலுவலகத்திற்கு வந்த பிரதிவிராஜ், அலுவலக பதிவேட்டில்

கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

பின்னர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புதிய ஆணையருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பொறுப்பேற்பு நிகழ்வின் போது, தமிழக முதல்வர் விஜய் இருக்கையில் வெள்ளை துண்டு இல்லாமல் அமர்ந்துள்ளதால் அதனை பின்பற்றும் வகையில் ஆணையரின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் துண்டை அகற்றிவிட்டு பிரதிவிராஜ் அமர்ந்தது அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

error: Content is protected !!