ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்க குறிப்பில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
மேலும் பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்.
