Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.
புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ. சட்டசபை கட்சி தலைவராக மோகன் சரண் மஜியை தேர்வு செய்தனர். இதனையடுத்து, மோகன் மஜி, முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். இவர், ஒடிசா சட்டசபைக்கு நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.  பா.ஜ.,வைச் சேர்ந்த பார்வதி பரிதா, துணை முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!