Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் உள்ள அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இங்கு எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தொழிலாளர்கள் தவறி விழுந்ததாகவும், மேலும் சில தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. காலை ஏழு மணியளவில் இந்தவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் மேலும் சில தொழிலாளர்கள் காயம் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் 2 பேர் பெத்தபுரம் மண்டலத்தைச் சேர்ந்த புலிவேறு மற்றும் 5 பேர் படேருவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இறந்தவர்களின் விவரம் வருமாறு:- 1) மோச்சாங்கி கிருஷ்ணா படேரு 2) மொச்சாங்கி நரசிங்க, படேரு 3) மொச்சாங்கி சாகர், படேரு 4) குறதாடு பஞ்சு பாபு 5) குர்ரா ராமராவ், படேரு 6) கட்டமுரி ஜெகதீஷ், புலிவேறு 7) பிரசாத் புலிவேறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!