Skip to content
Home » சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் 3 வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 13 ம் தேதியும், நேரடி டிக்கெட் விற்பனை 17ம் தேதி காலை 11 மணியளவிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, மேலும், குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1200 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 10 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2019ல் தான்  கடைசியாக ஒன்டே மேட்ச் நடந்தது. டெஸ்ட் மேட்ச் 2021ல் நடந்தது. எனவே 2 வருடத்திற்கு பின்னர் இப்போது சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டு 13ம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து  வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!