ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11 அடி உயரத்தில் 350 கிலோ கொண்ட பூ மாலை அணிவித்து வரவேற்று தொண்டர்கள் உற்சாகம்
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், இந்நிலையில் ஒரத்தநாடு தொகுதி நெடுவாக்கோட்டை பகுதியில் நாட்டிய குதிரை ஆட, கிராமிய இசைக்கருவியான கொம்பு

ஊதி வரவேற்று, சுமார் 11 அடி உயரத்தில் 350 கிலோ கொண்ட செண்டிப்பூ மாலையை கிரேன் மூலம் வைத்து 10க்கும் மேற்பட்டோர் மாலையை பிடித்து அவருக்கு அணிவித்தனர், மேலும் சுமார் 10

கிலோ கொண்ட சாக்லேட் இனிப்பு மாலையை அணிவித்தனர், இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதியுடன் வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்,
