Skip to content
Home » ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா … பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி…

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா … பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை தஞ்சாவூர் கல்வி மாவட்டம் சார்பாக ஜூனியர் ரெட் கிராஸ் ஒரத்தநாடு ஒன்றியம் சார்பாகவும் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா மற்றும் ஜே ஆர் சி மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சி வரவேற்பையை ஜே ஆர் சி ஒன்றிய அமைப்பாளர் அ.தமிழ்வாணன் வரவேற்புரையாற்றினார், ஒரத்தநாடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ் ச் கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்மேலும் ஒரத்தநாடு கிளை தலைவர் நாராயணசாமி தஞ்சாவூர் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீர் பிச்சைமணி, ஒரத்தநாடு கிளை பொருளாளர் ராமதாஸ், ஒரத்தநாடு கிளை ஆய்வுக் கால உறுப்பினர் செல்வம், தஞ்சாவூர் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் இணை கன்வீர் ,ஒக்கநாடு வேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஜே ஆர் சி ஆலோசகர் கோவிந்தராசு, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு கிளைச் செயலர் .சுரேந்தர் ஜீன்-ஹென்றி டுனான்ட் படத்தை திறந்து வைத்தார்.

மேலும் சுமார் 63 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்துகொண்டு அனைத்து மாணவர்களுக்கும் முத்தம்மாள் சத்திரம் முன்னாள் மாணவர்கள் சார்பாக ரூபாய் .50 மதிப்புள்ள பேனாவும், மரக்கன்று வழங்கப்பட்டது மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு .வி .செந்தமிழ் செல்வன் அவர்கள் சார்பாக விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பென்சில்

மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடன போட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒரத்தநாடு ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர் பரிசுகளை வழங்கினார். ஒரத்தநாடு தீயணைப்பு பேரிடர் மீட்பு குழு சார்பாக மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றி அனந்தசைனன் குழு சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலக அமைதிப் பேரணி நடைபெற்றது இந்த அமைதி பேரணியை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் அருண்குமார் தொடங்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் மீனாட்சி மருத்துவமனையின் சார்பாக தொப்பி வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பட்டுக்கோட்டை ஒன்றிய கணேஷ்குமார் ஜூனியர் ரெட் கிராஸ், வரலாறு ஜூனியர் ரெட் கிராஸ் வரலாறு ஜெனிவா ஒப்பந்த நாள் விழாவை பற்றி கருத்துரை வழங்கினார் இறுதியாக ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் பேரணி முடிவுற்றது முடிவற்ற பேரணியை ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவர் மா. சேகர் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பேரணி முடித்து வைத்தார். இறுதியாக ஜே ஆர் சி ஒன்றிய அமைப்பாளர் ராஜசேகர் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!