Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மு. பெத்தபெருமாள் (41). பெயிண்டர் வேலை செய்து வரும் இவர், தொட்டியத்தில் உள்ள ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். அக்.13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் தங்கியிருந்த சமுதாயக்கூடத்தின் மேல் மாடிக்கு சென்ற போது தவறி கீழே விழுந்து படுங்காயம் அடைந்தார். உடனடியாக
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!