Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

குளியல் அறையில் மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு

திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் டேவிட் ஜான் வயது 25. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக இதய நோய் இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது சம்பவத்தன்று இவர் வீட்டின் குளியறையில் மயங்கி கிடந்தார் இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டேவிட் ஜானை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா, புகையிலை பொருட்கள், போதை மாத்திரைகள் விற்பனை6 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்கள், போதை மாத்திரைகள் விற்பனை அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர கமிஷனர் காமினி உத்திரவின் பேரில் போலீசார் அந்தந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விளையாட்சா நகரில் ஒரு டீக்கடையின் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக உறையூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் வயது 18 என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் அரியமங்கலம் பகுதியில் உள்ள சிவகாமி அம்மையார் தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த சலீம் 56 , இதேபோல் அம்மா குளம் பகுதியில் விற்பனை செய்ததாக அதை பகுதியை சேர்ந்த மதன்குமார் 28 ஆகிய இரண்டு பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் இதே போல் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் உள்ளே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அதை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் 19, பென்சனர் காலனியை சேர்ந்த மோசஸ் ரித்திக் ரோஷல்23 ஆகிய இரண்டு பேரை கே.கே. நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் நெல் பேட்டை ரோடு அருகே விற்பனை செய்ததாக வரகனேரி பகுதியை சேர்ந்த சாம்ராஜ் 21 என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா,புகையிலை பொருட்கள், 30 போதை மாத்திரைகள் மற்றும் ரூ. 1350 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதை மாத்திரை விற்பனை செய்த சியாம் 23 என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!