Skip to content
Home » பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடந்தது. திருச்சிராப் பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். ராஜ்ய சபா எம்.பி சல்யாண சுந்தரம் பேசினார். அவர் பேசும் போது 2028 ம் ஆண்டு வர உள்ள மகாமகத்தை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும். கும்பகோணம் – பட்டுக் கோட்டை, கும்பகோணம் – விருத்தாசலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். நல்ல பல திட்டங்களை கொண்டு வர வேண்டும். பாபநாசம் ரயில்வே கேட்டில் பாலம் அமைக்க வேண்டும் என்றார். மத்திய மீன் வளம், கால் நடை பராமரிப்பு, பால் வளத் துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்று மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நின்று செல்ல கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், பேசினார். அவர் பேசும் போது ரயில்வே துறை அதி வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ் நாட்டில் 73 ரயில் நிலையங்களை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் வாழைப் பழம் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மையம் தொடங்கப் பட்டுள்ளது. ரயில்வேக்கு இந்த நிதியாண்டில் 6,000 கோடி நிதி ஒதுக்கீடுச் செய்யப் பட்டுள்ளது. கடல் பாசி பார்க் இராமநாதபுரத்திற்கு தரப் பட்டுள்ளது என்றார். இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, துரை முருகன், ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் வடக்கு தாமரைச் செல்வன், தெற்கு நாசர், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், பாவை அனிபா, மருத்துவ அணி துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், முபாரக் ஹீசைன், லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், மாவட்டத் தலைவர்கள் சம்பந்தம், ஆறுமுகம், வர்த்தகர் சங்கத் தலைவர் குமார், செந்தில், ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, டி.எஸ்.பி பூரணி உட்பட பங்கேற்றனர். முன்னதாக பா.ஜ.க, த.மா.கா சார்பில் மத்திய இணையமைச்சர் முருகனுக்கு வரவேற்பளிக்கப் பட்டது. பா.ஜ.க ஒன்றியத் தலைவர் செல்வம், நகரத் தலைவர் மணி கண்டன், மாவட்டத் தலைவர் சதீஸ், மாவட்ட நிர்வாகிகள் சாமு வேல், கென்னடி, தலைமை செயற் குழு உறுப்பினர் வாசுதேவன், பட்டாசு பிரபு, திருஞானம், த.மா.கா சார்பில் கும்பகோணம் மாநகரத் தலைவர் சங்கர், வட்டாரத் தலைவர்கள் பாபநாசம் வடக்கு ஜெயக் குமார், தெற்கு சேதுராமன், நகரத் தலைவர் தனபால், முன்னாள் அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுலைமான் பாட்சா, பொதுக் குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட நிர்வாகி முருகானந்தம், இளைஞரணி செந்தில், ஸ்ரீ ராம் உட்பட பங்கேற்றனர். பட விளக்கம்: மயிலாடு துறை- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பாபநாசத்தில் நின்றுச் செல்ல தொடக்க விழாவில் மத்திய இணையமைச்சர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!