Skip to content
Home » பாரிவேந்தருக்கு முசிறி பகுதியில் ஆதரவு திரட்டிய ரவி பச்சமுத்து….. உற்சாக வரவேற்பு

பாரிவேந்தருக்கு முசிறி பகுதியில் ஆதரவு திரட்டிய ரவி பச்சமுத்து….. உற்சாக வரவேற்பு

  • by Senthil

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர்  போட்டியிடுகிறார். இவர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் பாரிவேந்தருக்கு ஆதரவாக  ஐஜேகே கட்சியினர், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குேசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.்

நேற்று  முசிறியில் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு முசிறி அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்த இளைய வேந்தர் ரவி பச்சமுத்துக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து கோயில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர்  ரவி பச்சமுத்து வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து மாங்கரை பேட்டை தனியார் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் பணிபுரியும் பெண்களிடம் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அதனைத் தொடர்ந்து  முசிறி கள்ளர் தெரு, பரிசல் துறை ரோடு, கடைவீதி, மேலத்தெரு, பழைய பேருந்து நிலையம், தா.பேட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், துறையூர் ரோடு, அந்தரப்பட்டி, அழகாப்பட்டி, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாமரை சின்னத்தில் வாக்களித்து பாரிவேந்தரை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகர்கள் பாரிவேந்தரை ஆதரித்து அபியும் நானும் புகழ் குறிஞ்சிநாதன், ஆனந்த ராகம் ராஜ்கமல் , அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின் போது இளைய வேந்தர் ரவி பச்சமுத்து பேசியதாவது:

பாரிவேந்தர் மீண்டும் எம்பி ஆனால் நாமக்கல் நகரில் இருந்து தா .பேட்டை வழியாக பெரம்பலூர் அரியலூர் வரை ரயில்வே பாதை, காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, மகளிர் அரசு கல்லூரி, 1500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை உங்களுக்கு செய்ய உள்ளார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதி மக்களுக்கும் பணியாற்ற வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். எனவே படித்த பண்பாளர் ஆன பாரிவேந்தரை நீங்கள் மீண்டும் எம்.பியாக தேர்வு செய்ய வேண்டும் என இளைய வேந்தர் கேட்டுக்கொண்டார்.. அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், ஓபிஎஸ் அணியினர், அமமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரசார நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!