Skip to content
Home » பாஜகவும், ஐஜேகேவும் கொள்கையால் ஒன்றுபட்டது…. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்பேச்சு

பாஜகவும், ஐஜேகேவும் கொள்கையால் ஒன்றுபட்டது…. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்பேச்சு

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலையில் தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பங்கேற்பு.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி  பாஜக  வேட்பாளராக  ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகின்றார். இவர் தொகுதி முழுவதும்  சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.  அய்யர் மலையில்
குளித்தலை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் பணி குறித்து பொறுப்பாளர்கள் பேசினர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட  வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பேசியதாவது:

சரியான எம்.பி களை தேர்ந்தெடுத்தால் மட்டும் நமக்கான தேவைகளை பெற முடியும்.
தற்போது மோடி மீது மக்களுக்கு மரியாதை அதிகரித்துள்ளது.பாராளுமன்றத்தை நடத்த விடாமல்
முடக்குவதுதான்.  திமுக எம்.பிக்களின் வேலையாக இருந்தது.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நண்பர்களாகவும், நட்பு காரணமாகத் தான் தேவைகளை நிறை வேற்ற முடிந்தது.
ஊழல் வாதிகள் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வந்தால் இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது.

மாற்றத்தை கொடுப்பதற்கு திமுகவினர் சூழ்ச்சிகளை செய்வார்கள்,
ஊழல் பணத்திலிருந்து மக்களுக்கு பணம் கொடுப்பார்கள்.
I JK- பிஜேபி இரண்டும் ஒரே கொள்கை யுடைய
கட்சிகள்.கொள்கையால் ஒன்றுபட்டது பிஜேபி – I J K வும்.

பிரதமர் மோடி இந்தியாவிற்கு வந்த பிறகுதான்
மரியாதை அதிகரித்துள்ளது.
உலக நாடுகள் மோடியை Boss என்று அழைக்கிறார்கள்.

செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியது மோடி
அதற்காக – நாம் நன்றி கடன் பட்டிருக்க வேண்டும்.
இன்னும் 10 நாட்கள் நமக்கு முக்கியமான நாட்கள்.

பேர், புகழுக்காக  மட்டும் அரசியலுக்கு வந்துள்ளேன்.
1200 மாணவர்களை பட்டதாரிகளாக .மாற்றியதில்
அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றியதில் மகிழ்ச்சி.

– அண்ணாமலை போன்றோர் வந்த பிறகு தமிழகத்தில் BJP யில்புரட்சி ஏற்பட்டு உள்ளது
கடந்த தேர்தலில் குளித்தலை தொகுதி அதிக வாக்குகள் கொடுத்த தொகுதி. மோடி மனதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்தலில் மக்களிடம் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன்,
பாராளுமன்ற பொறுப்பாளர் லோகிதாசன்,

I J K பொதுச் செயலாளர் ஜெயசீலன்,
முதன்மை அமைப்பு செயலாளர்
SSவெங்கடேசன்
I J K அகில இந்திய துணைத் தலைவர் நெல்லை ஜீவா,
I J K கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா
மற்றும் பாஜக ஒன்றிய, நகர
பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!