Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவலஞ்சுழி அருகே டவுன் பஸ் சென்றபோது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அதனை முந்திச்செல்ல  முயன்றது. அப்போது பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் இந்த இரண்டு பஸ்களையும் முந்தி செல்ல முயன்றதால் சாலை முழுவதும் அடைத்த நிலையில் மூன்று பஸ்களும்  போட்டிப்போட்டு சென்றன.

அந்த நேரத்தில்  கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் டிரைவர், பஸ் டிரைவர்களின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ரோட்டில் காரை அப்படியே நிறுத்தி விட்டார்.   இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் போக்குவரத்து பிரிவு போலீசார் செந்தில் என்ற தனியார் பேருந்து, டி வி எம் என்ற தனியார் பேருந்து ஆகியவற்றின் டிரைவர்கள் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார். மேலும் தனியார் பஸ் டிரைவர்கள் இருவரின் லைசென்ஸை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை  செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!