உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்திகா. மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி வழக்கம் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் தங்கை அன்ஷிகாவுடன் வீட்டுப்பாடம் செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் பென்சில் தேவைப்பட்டதால் வாயில் ஷார்பனரைப் வைத்துக்கொண்டு பென்சிலை சீவிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பென்சில் தோல் தொண்டை பகுதியில் சிக்கியுள்ளது. இதனால் சிறுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். இதனை பார்த்து பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தகைய சம்பவம் சிறுமியின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் மறுத்துவிட்டதாக டாக்டர் கூறினர்.
சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….
