Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.  காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் 120க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 20 ஆயிரம் பேருக்கு பணி வழங்க திட்டமிட்டு உள்ளது.  5ம் வகுப்பு முதல்  பட்டதாரி, பொறியியல் பட்டதாரி,  ஆசிரியர் கல்வித்தகுதி என அனைத்து கல்விக்கும் ஏற்ப பணி வழங்கப்படும். குறைந்தபட்ச ஊதியம்  மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படும்.

எனவே  பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட  ஆண்கள், பெண்கள்  இந்த முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும்படி இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ள அருண் நேரு எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!