Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பெரம்பலூர் ஆலம்பாடி சாலை அன்பு நகரில் வசித்து வருபவர் அறிவழகன் ,இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசித்து வருகிறார். அறிவழகன் வேலைக்கு சென்று வீட்ட நிலையில் அவரது மனைவி முத்துமாரி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்த போது வீட்டினுள் சுமார் 3அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துபாரதி அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது வீட்டில் சாய்த்து வைத்திருந்த கட்டிலின் இடைப்பகுதியில் படுத்திருந்துள்ளது. இந்த நிலையில் தகவலிறந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படைத் துறையினர்.கட்டிலின் பின்புறம் இருந்த பாம்பை பத்திரமாக பிடித்து காப்பு காட்டில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் காலை முதலே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரினால் வீட்டிற்குள் பாம்பு நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!