Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷமான தினம். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது வழக்கமாகும்.

இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் உள்பட 108திவ்யதேசங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்,  துறையூர் அடுத்த பெருமாள்மலை யில் உள்ள பெருமாள் கோவில்,  தொட்டியம் அடுத்த திருநாராயணபுரம்  வேதநாராயணபெருமாள் கோவில் , கும்பகோணம்  சாரங்கபாணி கோவில், சக்கரபாணி கோவில் ஒப்பிலியப்பன் கோவில்,  திருச்சேரை சாரநாதபெருமாள்  கோவில்,  நாச்சியார்கோவில்  சீனிவாச பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று  சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வந்திருந்து பெருமாளை தரிசித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!