Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு பேரும் கடற்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் தூரம் நடுக்கடலில் நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்த போது பைபர் படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது இதில் படகு தீ பற்றி எரிய தொடங்கியது.

படகில் இருந்த 6 பேரும் தீக்காயங்களுடன் கடலில் குதித்து சத்தம் போட்டனர். அருகில் இருந்த மற்ற மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் படகு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது படகின் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும், காயமடைந்த அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த தீ விபத்தால் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு விடுத்துள்ளனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!