பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான ஆண்டு இறுதி பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். மேற்கண்ட பொதுத் தேர்வுக்கான அட்டவணை ஒரு சில நாட்களில் வெளியாகும். நீட் உள்ளிட்ட தேர்வுகளுடன் குறுக்கிடாத வகையில் 3 வகையான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.