Skip to content
Home » பிரதமர் மோடி மீண்டும் 9ம் தேதி தமிழகம் வருகிறார்….ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு

பிரதமர் மோடி மீண்டும் 9ம் தேதி தமிழகம் வருகிறார்….ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு

  • by Senthil

பிரதமர் மோடி இந்த வருடத்தில் மட்டும் தமிழகத்திற்கு 6 முறை வந்து  அரசு விழாக்கள் மற்றும்  தேர்தல் பிரசார  கூட்டங்களில் பங்கேற்றார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.  ஆனாலும்  தமிழகத்தில் பாஜகவுக்கான  ரிசல்ட்  சாதகமாக இருக்காது என  பாஜக நடத்திய ஆய்வில்  தெரியவந்ததாம். எனவே மீண்டும்  பிரதமர் மோடி தமிழகத்தில் 4நாட்கள்  இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். குறிப்பாக பாஜகவின் முக்கிய  வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர் 3 இடங்களில் ரோடு ஷோ நடத்தி் 3 பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார்.

பிரதமர் மோடியின்  4 நாட்கள் சுற்றுப்பயண விவரம் வருமாறு:

ஏப்ரல்9 மாலை 4 மணி : வேலூர் ரோடு ஷோ

மாலை 6 மணி : தென்சென்னை ரோடு ஷோ

10ம் தேதி காலை 11 மணி : நீலகிரி ரோடு ஷோ

அடுத்தது கோவையில் பொதுக்கூட்டம்

ஏப்ரல்13 காலை 11 மணி : பெரம்பலூர் பொதுக் கூட்டம்

14ம் தேதி காலை 11 மணி : விருதுநகர் பொது கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!