Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே ……..எல்கேஜி சிறுவனுக்கு பாலியல் தொல்லை….. பள்ளிக்கூட ஆயா கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 16-ந் தேதி அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுவனை கழிவறைக்கு  அழைத்து சென்றுள்ளார். அப்போது  கோகிலா, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று அந்த சிறுவனை மிரட்டி உள்ளார். ஆனால் அந்த சிறுவன் நடந்த சம்பவங்களை தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளான். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், கோகிலா மீது கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில்போலீசார் கோகிலா மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!