கோவை மாவட்டம் காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி நேற்று (நவ.12) மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில், கருப்பசாமி சாதி ரீதியாகப் பேசி, தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகாரை விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையிலான போலீசார், பெண் நிர்வாகியின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தவெக ஒன்றியச் செயலாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணிடம் போலீஸ் விசாரணை
