சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லியில் போராட்டம் தொடரும் நிலையில் மெரினாவிலும் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையின் சில பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல காவல்துறை தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
