Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்

புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள் ரூ.500-க்கு தரப்படும் என அறிவித்தும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று (நவ.4) வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மீன் பிடி துறைமுக கட்டுமான விரிவாக்கப்பப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பூமி பூஜையை தொடங்கிவைத்தார்.

அதையடுத்து ரேஷனில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை அனைத்து தொகுதிகளிலும் போடவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போட்டுட்டு இருக்காங்க. நகருங்க” என்று கோபத்துடன் கூறிய  முதல்வர் ரங்கசாமி புறப்பட்டார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், மக்களும் வரவில்லை என்கிறார்களே என்று கேட்டதற்கு, “போட்டுட்டு இருங்காங்க. தெரிஞ்சுக்கிட்டே கேட்கிறீங்க. வங்கிக் கணக்கில் பயனாளிகளுக்கு உடன் கிடைக்கும். ஒரே நாளில் அரிசி போட முடியுமா?” என்று கோபத்துடன்  கூறிவிட்டு  ரங்கசாமி அங்கிருந்து போய்விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!