Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானதுமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!