கரூர் அருகே லாலாபேட்டை அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரில் இறங்கி நடந்து சென்ற மாணவ மாணவிகள். சிந்தலவாடி ஊராட்சி நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து இருந்தும் கண்டு கொள்வதில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லாலாபேட்டை, அய்யர்மலை, திம்மாச்சிபுரம், தோகைமலை, நங்கவரம் பகுதிகளில் ஒரு மணி

நேரம் கனமழை பெய்தது.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக லாலாபேட்டை பகுதியில் கனமழை பெய்தது.
இதில் லாலாபேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது . மேலும் பள்ளி வளாகத்தில் இருந்து மழை நீர் வெளியே செல்வதற்கு முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.
மேலும் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவர்கள் அந்த மழை நீரில் தான் இறங்கி நடந்து சென்றனர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது.
மேலும் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி அருகிலே சிந்தலவாடி ஊராட்சி நிர்வாக அலுவலகம் இருந்தும் மழை நீரை வெளியேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மழைக்காலங்களில் இது போன்று பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் முறையான வடிகால் வசதிகள் அமைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
