Skip to content
Home » ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ…. ஒருவர் கைது…

ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ…. ஒருவர் கைது…

  • by Senthil

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டில்லி போலீசார் இன்று  கைது செய்தனர். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்யப்பட்டு மாற்றப்பட்டது.

ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து கத்ரினா கைஃப் கஜோல் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இப்படி, நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்றால, சாதாரண மக்களை இவ்வாறு எடிட் செய்து பரப்ப எவ்வளவு நேரம் ஆகும் என்ற அச்சம் எழுந்தது.

இதனையடுத்து, திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில்

DeepFake RashmikaMandanna

5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், இனிமேல் இது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு  எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!