நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் படக்குழு மாற்றம் செய்துள்ளது. ஏற்கனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.20-ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம், வரும் செப்.3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
