சென்னையை சேர்ந்த நகை வியாபாரி இன்று காலை காரில் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரது காரில் நகை, பணம் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் துரத்தினர். கொள்ளையர்கள் துரத்துவதை அறிந்த நகை வியாபாரியின் கார் டிரைவர் வேகமாக காரை ஓட்டினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரின் பின்பக்க கண்ணாடிகள் உடைந்தது. தொடர்ந்து கார் வேகமாக சென்று ஆா.கே. பேட்டை போலீஸ் நிலையம் முன் நிறுத்தப்பட்டது அங்கு நகை வியாபாரி புகார் செய்தார். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.