Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது- அதிர்ச்சி

வடாரண்யேஸ்வரர் கோயில் 100கால் மண்டப மேற்கூரை இடிந்தது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உப கோயில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் இரத்தின சபைகளில் ஐம்பெரும் சபைகளில் முதல் சபை ஆகும்

1200 வருடம் பழமையான இந்த திருக்கோயில் 2026-ஜூன் 25ஆம் தேதி திருக்கோயில் வளாகத்தில் 100 கால் மண்டபத்தில் திருக்கோயிலால் பராமரிக்கப்படும் 35 பசுகளுக்கு தேவையான வைக்கோல் இருப்பு வைத்திருந்த இந்த மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பெரும் தீ விபத்தாக மாறி பல மணி நேரம் போராடி தீயை அணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .

இந்நிகழ்வில் திருக்கோயிலில் பணியில் இருந்த இரண்டு கோயில் ஊழியர்களை மட்டும் கோயில் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருந்தனர். ஆனால் அதன் பிறகு பழமையான இந்த திருக்கோயிலில் பழமையான இந்த மண்டபம் பராமரிப்பு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முன் வரவில்லை மேலும் திருவள்ளூர் மாவட்ட தோல்விகள் துறை அதிகாரிகள் நேரில் வந்து மண்டபம் குறித்து அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யவில்லை இதன் காரணமாக ஒரு பழமையான திருக்கோயிலில் தற்பொழுது தீ விபத்து ஏற்பட்ட அந்த 100 கால் மண்டபத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆயிரத்து நூறு வருடம் பழமையான ஒரு மண்டபம் ஒரு புராதான கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் மேற்கூரை இடிந்து முழுவதுமாக சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. இந்த திருக்கோயிலில் பக்தர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

இந்த மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பக்தர்களுக்கு கோயில் ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் மண்டபத்தை பாதுகாப்போம் பணியில் கோயில் நிர்வாகம் முழுமையாக செயல்படவில்லை என்பது இதற்கான ஆய்வுகள் செய்யவில்லை என்பது இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக செயல்பட வேண்டிய தொல்லியல் துறை மாவட்ட அதிகாரிகளும் அலட்சியமே தற்பொழுது மண்டபம் இடிந்து உள்ளதற்கான மீண்டும் ஒரு சம்பவமாக மாறி உள்ளது

உடனடியாக தமிழக அரசு இந்த திருக்கோயிலின் தொன்மையை பாதுகாக்க ஆய்வுகள் செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திருக்கோயிலை திருக்கோயில் கட்டடங்களை தொன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்த திருக்கோவிலின் பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

error: Content is protected !!